
திரைப்பட தயாரிப்பாளரான டேனியல் ரொஸ்கென் டு பிளென்டியர் (Daniel Toscan du Plantier) என்பவரின் மனைவியான ஸோபி (Sophie -39), என்பவர் அயர்லாந்திலுள்ள தனது விடுமுறை இல்லத்தில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது கையிலிருந்த காயங்கள் அவர் கொலை செய்யப்படும் முன் கொலையாளியுடன் போராடியதை சுட்டிக்காட்டின. அவருக்கு அருகில் இரத்தம் தோய்ந்த நிலையில் பெரிய கற்கள் கிடந்துள்ளன.
இந்த நிலையில், குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசித்த ஊடகவியலாளரான இயன் பெய்லி என்பவர் -Ian Bailey (62) அயர்லாந்து பொலிசாரால் இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாலும் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் பெய்லியின் மரபணு கிடைக்காதபோதும், அவரது கைகள் மற்றும் நெற்றியில் இருந்த கீறல்கள் கொலை தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தின.
ஆனால் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வெட்டும்போதும், வான்கோழி ஒன்றை சமையலுக்கு தயார் செய்யும்போதும் தனது உடலில் காயம் ஏற்பட்டதாக பெய்லி கூறியிருந்தார்.
இந்தநிலையில் ஸோபியின் கொலை வழக்கு விசாரணை பிரான்சில் நடைபெறும் அதேவேளை, பெய்லி நீதிமன்றத்தில் முன்னிலையாகமாட்டார் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அயர்லாந்து அரசாங்கமும் பெய்லியை நாடுகடத்த மறுத்துவிட்டதால், அவர் இல்லாமலே தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
