LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 20, 2019

கனடாவில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் புகலிடம் கோரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய புள்ளிவிவரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த இரண்டு ஆண்டுகளில் கனடாவில் புகலிடம்கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

கணக்கெடுப்பின் படி 2015ஆம் ஆண்டு 16,058 பேரும், 2016ல் 50,389 பேரும், 2018ல் 55,000 பேரும் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

2017ம் ஆண்டு விண்ணப்பித்த 50,389 பேரில், 12,234 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, 10,930 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

27,225 பேரின் விண்ணப்பங்களின் முடிவு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ட்ரம்ப், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றார்.

இதன்காரணமாகவே கனடாவில் புகலிடம் கோரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7