நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த கருத்துக்கணிப்புகளால் தொண்டர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கருத்துக்கணிப்புகளால் யாரும் சோர்வடைய வேண்டாம். நமது கடின உழைப்பு வெற்றியை தரும். வாக்குப்பெட்டிகள் வைத்திருக்கும் அறையிலும், அறைக்கு வெளியிலும் நமது முகவர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்” என்றும் பதிவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வெளியாகிய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைவிட அதிகமாக 300 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





