சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் நடத்திய மறுநாள் எகிப்திய படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய போராளிகள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 சுற்றுலாப்பயணிகள் காயமடைந்த குண்டுத்தாக்குதலை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (திங்கட்கிழமை) அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது.
25 பேரை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று எகிப்தின் கிசா பிரமிட் அருகே சென்றுகொண்டிருந்த போதே குறித்த குண்டு வெடிப்பு இடம்பெற்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களா கொல்லப்பட்டுள்ளனர் எனபதை உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை.
ஆனால் சுட்டுக்கொல்லப்பட்ட இஸ்லாமிய போராளிகள் குழு நாட்டில் தொடர்ச்சியான தாக்குதல்களை திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.





