மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்ட கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன்போது, வவுனியா பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபரான வையாபுரிநாதனின் மனைவியான திலகவதி (68 வயது) என்பவரே உயிரிழந்தார்.
இதேவேளை காமடைந்த மூவரில் ஒருவர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
                 

 




