LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, May 1, 2019

பாதுகாப்பு நடவடிக்கைகள் சாதாரண மக்களைப் பாதிக்கக் கூடாது

நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்து
மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சாதாரண மக்களைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டுமென வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இன, மத ரீதியாக அனைவரிடத்தேயும் ஐக்கியத்தையும் சமத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழிலுள்ள தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னமும் மீள முடியாமல் இருக்கின்றனர். அதே போன்று அரசாங்கமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் திகைத்துப் போயுள்ளது. ஆனாலும் இத்தகைய பயங்கரவாதச் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துக் கொண்டு வருகின்றது.

குறிப்பாக நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டு வந்த இந்த ஆட்சியில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த இராணுவ பிரசன்னத்தைக் குறைப்போம் என்று கூறப்பட்டாலும் தற்போது அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அளவிற்கு அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதனூடாகவே நாடு முடிவதும் இரானணுவ பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பல்வேறு சோதனைகள், தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இராணுவம் மற்றும் பொலிஸாரைக் கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கின்ற இத்தகைய நடவடிக்கைகளில் பல்வேறு துன்பங்களை நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்றனர்.

எனவே இராணுவத்தைக் கொண்டு முன்னெடுக்கும் நடவடிக்கைககளில் பொது மக்களைப் பாதிக்கின்ற வகையில் அல்லது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம்.

நாட்டில் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாதச் சம்பவத்தை சில அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் தங்கள் அரசியல் சுய இலாபகங்களுக்காக பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலைமையும் இருக்கின்றன.

கடந்த தேர்தல்களில் வீழ்ச்சியைச் சந்தித்தவர்கள் இச்சம்பவத்தை வைத்து கட்சிகள் மீது சேறு பூசுவதும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்ற மிக மோசமான நிலைமையும் உள்ளது.

ஆகவே இப்போதுள்ள சூழலில் நாட்டிலுள்ள அனைத்து இனங்கள், மதங்களிடத்தேயும் ஒற்றுமையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டியதே மிக அவசியமானது. அதனை மதத் தலைவர்கள் சமூக தலைவர்கள் அரசியல் தலைவர் இணைந்து செய்ய வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது. அதனை விடுத்து மீண்டும் இனங்கள் மதங்களிடையே முரண்பாடுகளை தூண்டி விடக்கூடாது.

எனவே முஸ்லிம், தமிழர், சிங்களம் என இனங்களுக்கிடையே அல்லது மதங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். இதற்கான முழுப் பொறுப்பும் அரசிற்கே இருக்கின்றது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றோம்” என்றுதெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7