
தட்டுங்கள்.com இன் ஊடகப் பங்களிப்பில் மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் நடாத்திய
பிரமிள் விருது விழா - 2018
& பிரமிள் நினைவுப் பேருரைத் தொடர் -01 கடந்த 21-04-2019 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு திருகோணமலை சன்சைண் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது.

தட்டுங்கள்.com இன் இயக்குனர் பேரம்பலம் சுதாகரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய நிகழ்வை பிரபல ஆய்வாளரும் எழுத்தாளருமான திருமலை நவம் அவர்கள் தலைமையேற்று "தர்மு சிவராமு என்னும் கால விருட்ஷம் " என்ற தலைப்பில் பேரூரையாற்றினார்.
பிரமிள் விருதுக்குரிய நூலாக தமிழகக் கவிஞர் ராஜேஷ் வைரபாண்டியன் எழுதிய "வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி" என்ற நூலை மகுடம் காலாண்டிதழ் பிரதம ஆசிரியர் அறிவித்து அவருக்குரிய விருதினை சேர்ப்பிக்க தட்டுங்கள் இயக்குனரிடம் வழங்கி வைத்தார். முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்த பிரமிளின் உறவினர் திருமதி அன்ன லெட்சுமி பேரம்பலம் பிரமிள் சான்றிதழ் விருது பெற்ற யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த கவிஞை மாதவி உமா சுத சர்மாவுக்கு விருதினை வழங்கினார்.
பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த திருகோணமலை மாவட்ட முன்னாள் மேலதிக அரச அதிபர் திரு. ந. புகேந்திரன் சிறப்புரையாற்ற அமர்வு ஒன்று நிறைவு பெற்றது.

சன்சைண் முகாமையாளர் திரு. அ.லூவிஸ் தவராஜ் நூலை வெளியிட்டு வைக்க முதல் பிரதியை தட்டுங்கள்.com இயக்குனர் பேரம்பலம் சுதாகரனும் சிறப்பதியாக லண்டனில் இருந்து வந்து கலந்து கொண்ட பிரபல பெண்ணிய செயற்பாட்டாளரும் பேச்சாளருமான கலாநிதி மேனகா ஜோஜி யும் பெற்றுக்கொண்டனர்.
மூன்றாவது அமர்வாக நடைபெற்ற உள்ளம் நிறுவன உதவி வழங்கல் நிகழ்வில்மூதார்

இந் நிகழ்வை கவிஞர் தில்லைநாதன் பவித்திரன் தொகுத்து வழங்கினார்.
