பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.வெசாக் தினமன்று அவரைச் சிறையில் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன 45 நிமிடங்களுக்கு மேல் கலந்துரையாடியதுடன் பொதுமன்னிப்பில் விடுதலை செய்வதாகவும் உறுதியளித்திருந்தார்.
இதனை அடுத்து பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை விடுவிப்பதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று மாலை கையொப்பமிட்டுள்ளார்.





