LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 26, 2019

தமிழ் பெயரை வைத்து ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம் ; பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை

மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் தமிழ் பெயரில் ஆலய குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராகச் செயற்­பட்ட  நபர் ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் மூதூர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்­த­நபர் ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து கொடுத்­தாரா? என்று பக்­தர்கள் எழுப்­பிய சந்­தே­கத்­தை­ய­டுத்து அது தொடர்பில் ஆலய நிர்­வா­ச­பை­யி­னரை அழைத்து  நேற்று மூதூர் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளதாக தெரியவருகிறது. இச்சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ஏறா­வூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்தப் பெயரை மறைத்து சிவா என்ற தமிழ் பெயரில் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தின் பூச­க­ருக்கு உத­வி­ய­ளா­ராக கடந்த 02 வரு­டங்­க­ளாக பணி­யாற்றி வந்­துள்ளார்.

இவர் பூஜையின் போது பக்­தர்­க­ளுக்கு வழங்கும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களைக் கலந்து கொடுத்து வந்­துள்­ள­தாக பக்­தர்கள் சிலர் சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் குறித்த நபர் கடை­யொன்றில் கைய­டக்க தொலை­பே­சிக்­கான அட்­டை­களை திருடி சேரு­வில பகு­தியில்  விற்ற போதே  கைது­செய்­யப்­பட்­டுள்ளார். இவரை  மூதூர் பொலிஸார் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­திய போது  மேற்­படி நபர் தமிழர் அல்லர் என்றும்  முஸ்லிம் எனவும் போலி­யான பெயரில் அங்கு பணிபுரிந்­த­து­வந்­ததும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

 அது­மட்­டு­மின்றி இவரை புல­னாய்வு பிரி­வினர் தொடர்ந்து அவ­தா­னித்து வந்த நிலையில், இவர் ஏறா­வூ­ருக்கு  தனது தாயாரின் வீட்­டுக்கு சென்று அங்­குள்ள பள்­ளிக்கு தொழ சென்ற வேளையில் இவர் முஸ்லிம் நபர் என்­பது  ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது.

இதற்­கி­டையில் இவர் பற்­றிய ஒரு தகவல் முகப்­புத்­தக நூலில் வெளி­வந்த போது தான் தமிழர் தான் முஸ்லிம் அல்ல என மறுத்­து­ரைத்து தன்­மீது பொறாமை உள்­ள­வர்­களே இந்த முக­நூலை வெளி­யிட்­டுள்­ளார்கள் என தெரி­வித்­துள்ளார். அது­மட்­டு­மன்றி தனியார் நிறு­வ­ன­மொன்றில் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றி முஸ்லிம் பெண் ஒரு­வரை திரு­மணம் முடித்­த­தற்­கா­கவே தான்  ஊரை விட்டு ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக   தெரி­வித்­துள்ளார்.

இவர் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக மூதூர் பொலீசார் ஆலய குருக்­க­ளையும் பரி­பா­லன சபை­யி­ன­ரையும் நேற்று சனிக்­கி­ழமை அழைத்து விசா­ர­ணை­களை செய்­துள்­ளனர்.

இதே­வேளை கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் குருக்­க­ளாக பணி­யாற்றி வரும் குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராக குறித்த நபர் சேர்ந்து கடந்த 02 வரு­டங்­க­ளாக இந்த ஆல­யத்தில் பணி­யாற்றி வந்­துள்­ள­தோடு மேற்­படி குருக்­க­ளி­ட­மி­ருந்தே குறிக்­கப்­பட்ட பணத்தை சம்­ப­ள­மாக பெற்று வந்­துள்ளார் எனவும் ஆலய நிர்­வாக சபை­யினர் தெரி­வித்­துள்­ளனர். இவர் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரையை கலந்து விநி­யோ­கித்­துள்­ளாரா என்­பது தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை பொலிஸார் மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை  மூதூர் பொலி­ஸாரால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருக்கும் சிவா, என்று அழைக்­கப்­படும் குறித்த நபரின் உண்­மை­யான  பெயர் புஹாரி முக­மது லாபீர் கான் என்றும் இவர் ஏறா­வூரை பிறப்­பி­ட­மாகக் கொண்­ட­வ­ரென்றும் ஏலவே மூன்று திரு­ம­ணங்கள் செய்­துள்ளார் எனவும்  தெரிய வரு­கி­றது.  மூத்த மனைவி ஓட்­ட­மா­வடி மீரா­வோடைச் சேர்ந்த அபுல் ஹாசன் சுபா­ஹனி என்றும்  இரண்­டா­வது மனைவி   மட்­டக்­க­ளப்பு கர­டி­ய­னாற்றைச் சேர்ந்த நல்­ல­தம்பி சாந்­தி­யென்ற தமிழ் பெண் என்றும்  மூன்­றா­வ­தாக திரு­மணம் செய்­தவர்  கல்முனையைச்  சேர்ந்த  ஏ.ஜே.எப்.சப்னா என்றும்  தெரிய வருகிறது.  இவர் ஏலவே கற்பழிப்பு மற்றும் ஜீவனாம்சம் வழங்காமை ஆகிய குற்றச்செயல்கள்  காரணமாக  நீதிமன்ற வழக்குக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் என்றும் இவரது கையடக்க தொலைபேசியை பரிசீலித்த போது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சில தகவல்கள் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7