இன்னும் சில மாதங்களில் நாட்டில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தை பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவுடன் முற்றாக ஒழிப்போம் என அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தை எமது பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவுடன் இன்னும் சில மாதங்களில் முற்றாக ஒழிப்போம்.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாகவும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகவும் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
எப்படியாயினும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
இதுமட்டுமன்றி உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களை இலங்கையில் முதலீட்டை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றோம்.
குறிப்பாக சுற்றுலாத்துறை வியாபாரிகளுக்கு சலுகைகளை வழங்க தீர்மானித்திருக்கின்றோம். அவர்களின் வட்டி, கடன் தொகைகளுக்கு ஒரு வருடத்துக்கு சலுகை வழங்க இருக்கின்றோம்.” என கூறினார்.





