
இன்று ( திங்கட்கிழமை) அதிகாலை முதல் ஏறாவூரின் சில பகுதிகளை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியிலுள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டை சோதனையிட்டபோது, அங்கிருந்து 5 மில்லிக் கிராம் கஞ்சாவை இராணுவத்தினர் கைப்பற்றியதுடன் அங்கிருந்த சட்டத்தரணியின் மனைவியையும் கைது செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பெண்ணையும் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது பொலிஸ் காவலில் தடுத்து வைத்துள்ள குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த பெண்ணின் கணவனான சட்டத்தரணி, சம்பவம் நிகழ்ந்தபோது வீட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
