
ஹொரவபொத்தான – கிவுலேகட மற்றும் எல்லேவெவ ஆகிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இன்று (திங்கட்கிழமை) கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே குறித்த ஐவரையும் ஜூன் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கெப்பத்திகொல்லாவ பகுதியில் கைது செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டு சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலிருந்து வௌியாகிய தகவலின் பிரகாரம் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேகநபர்கள் அனுராதபுரம் மற்றும் திருகோணமலையில் சஹரானின் பிரசார நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் பின்னர் அவர்களை 72 மணிநேர தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே அவர்களுக்கு இன்று தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜைனீடீன் தலிப துல்லா என்ற பாடசாலை அதிபரும் இரண்டு ஆசிரியர்களான லெபீ தம்பி ஜாஸ்மின், செனூல் அப்தீன் இர்ஷான் ஆகியோரும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மொஹெடின் பவா நௌபர் மற்றும் நார்ஜே ஜகாரியா ஆகியோரே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
