
மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தை அரச பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக அறிவிக்குமாறு கோரி, தனிநபர் பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால வினால் இந்தப் பிரேரணையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடும்போக்குவாதமுடைய சிறு பிரிவிடமிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கு, மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு சுவீகரித்து, அரச பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக அது அறிவிக்கப்பட வேண்டும் என திலங்க சுமதிபால தமது பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலைமையில் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு, இலங்கையில் இனியும் இவ்வாறான நிலை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.





