
மேலும் நாடாளுமன்றில் சில கூறுகள் அகற்றப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாடாளுமன்றத்தில் யாரேனும் பொருத்தமானவர் இல்லை என்றால் அவர் பொது மக்களால் தேர்தலின் மூலம் அகற்றப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்தவகையில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஒரு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் என்று அவர் கூறினார்.
இதன் மூலமாக நாடாளுமன்றத்திற்கு வெளியே இருக்க வேண்டியவர்களையும் பொருத்தமான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் இன்னும் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
