
அத்துடன், காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை சாமளிப்பதே ராகுலுக்கு கடினமான விடயமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “ராகுல் காந்திக்கு தலைமை பொறுப்பில்லை என்று சொல்லிவிட முடியாது. காங்கிரஸ் கட்சியை நிர்வகிப்பது மிகவும் கடினம். பழம்பெரும் கட்சி என்பதால் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு இளம் தலைவராக பழம்பெரும் தலைவர்களை சமாளிப்பது கடினம். காங்கிரஸில் உள்ள பழம்பெரும் தலைவர்கள் யாரும் சரியாக ஒத்துழைக்கவில்லை. மேலும், கடுமையாக உழைக்கவும் இல்லை. இதுவே எனது கணிப்பாகவுள்ளது.
இதனிடையே, ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகக் கூடாது. அவர் தன்னை நிரூபிக்க வேண்டும். ஆளும்கட்சி எவ்வளவு முக்கியமோ, அதைப் போல எதிர்க்கட்சியும் மிகவும் முக்கியம். ஆகவே, காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியாக தங்களுடைய வல்லமையை நிரூபிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
