
அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் அசாதாரண சூழல் நிலவிவருகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் தொடர்ச்சியாக நேற்றும் மினுவாங்கொட உட்பட பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
