தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளின் 41ஆம் நாள் நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு மட்டக்களப்பு மயிலங்கரச்சை கண்ணகியம்மன் ஆலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி சுடர் ஏற்றப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, அன்னதான நிகழ்வும் நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன.
மயிலங்கரச்சை கிராம மக்களின் ஏற்பட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, பிரதேச சபை உறுப்பினர்கள், இந்து மற்றும் பௌத்த மதகுருமார், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.






