அடுத்து, பழமைவாதக் கட்சியின் தலைவர் ஜேசன் கென்னே உத்தியோகபூர்வமாக மாநிலத்தின் 18 ஆவது முதல்வராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன் தனது அமைச்சரவையையும் அமைத்துள்ள அவர், பட்டையக் கணக்காளராக இருந்த ட்ராவிஸ் டோவ்ஸ்-ஐ நிதிஅமைச்சராகவும், கல்கரி வழக்கறிஞர் டக் சூவிச்சரை சட்டஅமைச்சராகவும் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற மாநிலத்தேர்தலில், முன்னர் ஆட்சியில் இருந்த புதிய ஜனநாயகக் கட்சியைத் தோற்கடித்த ஐக்கிய பழமைவாதக் கட்சி, 63 ஆசனங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது புதியஆட்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து, முன்னாள் முதல்வர் றேச்செல் நோட்லி எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவதற்கு உறுதியளித்துள்ளார்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள மாநிலஅரசின் சட்டமன்றம், இந்த மாதத்தின் பிற்பகுதியில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.