17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்வரும் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்து.
மோடி தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்தவகையில் 17இல் ஆரம்பமாகும் மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 26ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றார். அவரது தலைமையிலான புதிய அமைச்சர் சபையும் பதவியேற்றது.
இதையடுத்து, மோடி மற்றும் அவரது அமைச்சர் சபையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





