
இதனை அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க ரத்னாயக்க இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வைத்தியருக்கு எதிரான முறைப்பாட்டில் பெரும்பாலான முறைப்பாடுகள் 2008 மற்றும் 2009 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட மகப்பேற்று சத்திரசிகிச்சை நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காணக்கூடிய விடயத்தில் விஞ்ஞான பூர்வமான விளக்கம் தேவைப்படுகிறது என கூறிய அவர் இதற்கிடையில், குறித்த வைத்தியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவை அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் நிராகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால், விசாரணையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது என்பதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு தனி குழுவை நியமிக்க வேண்டும் என்றும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
