அதனூடாக மேற்கத்தைய நாடுகள் ஈர்க்கப்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் தனது விஜயம் அமையும் என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தாய்வானுடனான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கும் பசிபிக் நாடுகள், பெய்ஜிங்கின் ஆதிக்கத்தை பசுபிக் வலயத்தில் நிறுவுவதற்கு எதிர்ப்பு போக்கினை கொண்டிருக்கவில்லை என்பதை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உறுதிப்படுத்துகின்றன.
தாய்வானை அங்கீகரிப்பதற்கான பசுபிக் வலய நாடுகளில் சொலமன் தீவுகள் மாத்திரமே முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அண்மையில் அந்த தீவுகளின் நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட தேர்தல்களுக்குப் பின்னர் இந்த விடயம் தொடர்பான கொள்கை கேள்விக்குள்ளானது.
எவ்வாறாயினும், தாய்வானை சீன அரசாங்கம் ஒரு மாற்றாந்தாய் கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்தநிலையில், பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பிரதமராகிய பின்னர் ஸ்கொட் மொரிசன் மேற்கொள்ளும் முதலாவது வௌிநாட்டு பயணம் இதுவாகும்.
அவர் ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு சொலமன் தீவுகளுக்கு முதல் தடவையாக விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
