இம்மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிய – ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டம் மற்றும் ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு என்பன ‘அதிகரித்துவரும் முதியோர் சனத்தொகையினரின் சமூகப்பாதுகாப்பு மற்றும் தொழில்வாய்ப்பு சார்ந்த சவால்களையும், ஆசியப் பிராந்தியத்தின் தற்போதைய அவசர நிலைமைகளையும் அரசியல் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்கின்றன? என்ற விடயத்தை மையமாகக் கொண்டு இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிலையில், அதன் மூன்றாவது கூட்டத்தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு இம்முறை இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
இம்மாநாட்டை வெளிவிவகார அமைச்சு, ஆரம்பக் கைத்தொழில்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.