மேலும், பிரதமரோ வேறும் நபர்களோ தமக்கு லவாலீன் விவகாரத்தில் எவ்வித தலையீடுகளும் செய்யவில்லை எனவும், அவ்வாறான அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு, குபெக்கில் உள்ள லவாலீன் நிறுவனத்துடன் அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது எனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்ட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, லவாலீன் விவகாரம் காரணமாக லிபரல் கட்சியின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் பதவி விலகியுள்ளதுடன் அவர்கள் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.என்.சீ லவலின் நிறுவனம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலான விவகாரத்தில் கனேடிய பிரதமர் தலையீடு செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் அதனை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச அமைப்பான எஸ்.என்.சீ லவலின் நிறுவனம், சர்வதேச ஊழல் மோசடிகள் தொடர்பிலான பிரகடனம் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து கண்காணிப்பு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.