ஒன்றாரியோவில் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக புறோகிரசிவ் கொன்சவேடிவ் மாகாண அரசு தெரிவித்துள்ளது.இதற்கமைய, ஒன்றாரியோவில் தற்போது கடமையாற்றி வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்று சதவீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு ஆண்டுகளில் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தற்போது கடமையில் உள்ள ஆசிரியர்களில் இருந்து 3475 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
முழு நேர அடிப்படையில் கடமையாற்றி வரும் ஆசிரியர்களை பணி நீக்குவதன் மூலம் 851 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என்று முதல்வர் டக் ஃபோர்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





