கனடாவில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி மூன்று மலையேறிகள் உயிரிழந்துள்ளனர்.கனேடியன் ரொக்கீஸ் என்ற மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்குண்டே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தவர்கள் மலையேற பயன்படுத்திய உபகரணங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோசமான காலநிலை காரணமாக மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை கண்டெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது





