புதன்கிழமை) காலையிலிருந்து பொலிஸாரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது.
குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒப்ரேசன் புளூ ஹொக் என்ற பெயரில் எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து பத்துவாரத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு குற்றத்தடுப்பு நடவடிககையின் முன்னோட்டமாக அதிகாரிகளின் இந்த நடமாட்ட அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாகனங்களில் இருந்து திருடுதல், விற்பனைநிலையங்களில் இருந்து திருடுதல், போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேறகொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொலிஸார் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை ஒன்றில், இந்தக் காலப்பகுதி முழுவதும் சைனா ரவுன் பகுதியில் பொலிஸாரின் மேலதிக சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளதால் வியாபார நிலையங்களில் மற்றும் கடைகளில் இரவு நேரத்தில் மின்விளக்குகளை ஒளிரவிடும்படியும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.