(ஜெ.ஜெய்ஷிகன்)
பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
சுமூகசேவை உத்தியோகத்தர் திருமதி.சிவநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், மத்தியரசிற்கான சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சந்திரகுமார் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
சனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' எனும் தொனிப் பொருளில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களமும் இணைந்து 08ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை பல்வேறு விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இன்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், அவை மீறப்படுகின்ற போது எவ்வாறான சட்ட ஏற்பாடுகள் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற தொனிப்பொருளிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு (11.04.2019) நடைபெற்றது.வளவாளராக திருமதி.டயானா சுஜீவா புளோரின்டன் கலந்து கருத்துரை வழங்கினார்.