LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 11, 2019

மட்டு.மாவட்டத்தின்14 பிரதேச பிரிவுகளிலும் 20015 மில்லியன் செலவில் 1115 வேலைத்திட்டங்கள் நிறைவு


(ஜெ.ஜெய்ஷிகன்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டிற்காக ஒன்றிணைவோம்" என்ற தேசிய திட்டத்திற்கு  அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன ஜனாதிபதி செயலகம் , மாகாண சபைகள் , அதிகார சபைகள் , வரிசை அமைச்சுக்கள் , திணைக்களங்கள் , ஆகியவற்றின் நிதிக்கொடுப்பனவின் கீழேயே இந்த செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ஒட்டு மொத்தமாக 200।5  மில்லியன் செலவில் 1115 வேலைத்திட்டங்கள்  14 பிரதேச பிரிவுகளிலும் 161 கிராம பிரிவுகளிலும் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை  நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.    அதனடிப்படையில் முதல் மூன்று நாட்களுக்கும் செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் 7।2   மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டு 845 திட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. 20 904  குடும்பங்கள் இதனால் நன்மையடைந்துள்ளன.
அதிகபட்சமாக மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுகளில் 120 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு 4।5 மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டுள்ளது 
 மேலும் இன்றும் நடைபெறவுள்ள திட்டங்களுடன் சேர்த்து இந்த எண்ணிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இத்திட்டத்தில் விசேடமாக ஓய்வூதியக்காரர்களுக்கான பிரச்சனைகள் , சிறுவர் மற்றும்  முதியோர் சம்பந்தமான   பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டன அது மட்டுமல்லாது வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் அது தொடர்பான வேலைகள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வுகள் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுப்பதற்கான துரித சேவைகள் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன அதேபோன்று காணி ஆணையாளர் திணைக்களத்தினால் உறுதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது 

பாடசாலை மாவர்களுக்கான விசேட வேலைத்திட்டமாக பாடசாலையை கைவிட்ட மாணவர்களின் கல்வியினை மீண்டும் தொடர்வதற்கு சேர் ஜோன் கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழகத்தில்  பலவிதமான கல்வித்திட்டங்களில் இணைக்கும் வகையிலான செயற்திட்டம் , விவசாய அமைச்சுடனான விதை உள்ளீடுகள் , உரச்செயலகத்தின் பணிகள் , மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மது மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டங்கள் , டெங்கு வேலைத்திட்டம் , பொலிசாரின் சிரமதான நிகழ்ச்சி நிரல்கள் என சமூக நலன் கருதிய பல நிகழ்ச்சி திட்டங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது .























 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7