நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் பொலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியின் போது அட்லி – ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதன்மூலம் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இதற்காக பிரம்மாண்ட விளையாட்டு அரங்கும் தயாராகி வருகின்றது. விரைவில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். இவர்களுடன், கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கின்றார். அகோரம் தயாரிக்கும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.