விகாரி தமிழ் சிங்கள சித்திரைப்புதுவருட பிறப்பினை
முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து
இந்து ஆலயங்களிலும் விசேட சித்திரைப்புதுவருட
பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க
மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடுகள்
இடம்பெற்றன
ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ
குருக்கள் தலைமையில் நடைபெற்ற புதுவருட பூஜை
வழிபாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின்
பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகைதந்த மக்கள்
கலந்துகொண்டனர்.
இதன்போது பூஜைகள் நடைபெற்றதுடன் அடியார்களுக்கு
ஆசிர்வாதங்கள் வழங்கப்பட்டதுடன் கைவிசேடமும் வழங்கப்பட்டது.
விகாரி தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டை
வரவேற்கும் வகையில் ஆலயத்திற்கு வருகைதந்த
பக்தர்கள் தமது புதுவருட வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்