மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி வழிகாட்டலின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற
விசேட புதுவருட நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா
அதிபர் எச் .டி .கே .எஸ் கபில ஜயசேகர கலந்துகொண்டார்
இன்று நடைபெற்ற நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக சர்வமத வழிபாடுகள்
நடைபெற்றது ,இதனை தொடர்ந்து அதிதிகளின் விசேட புதுவருட வாழ்த்து செய்திகளும்
தொடர்ந்து பாரம்பரிய உணவு பரிமாறல்கள் மற்றும் கலாசார ,விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது .
இந்நிகழ்வில் மாவட்ட பிரதி
பொலிஸ் அத்தியட்சகர் எல் ஆர் .குமாரசிறி ,மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மென்டிஸ்
,சர்வமத தலைவர்கள் ,காத்தான்குடி முஸ்லிம் சம்மேளனம் உலமாக்கள் காத்தான்குடி வர்த்தக சங்க
உறுப்பினர்கள் ,சிவில் சமூக உறுப்பினர்கள் ,பாடசாலை மாணவர்கள் என பலர்
கலந்துகொண்டனர்