யிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த குடும்பத்தினர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் Timo என்ற 21 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Timo, அவரது அக்கா மற்றும் பெற்றோர் ஆகியோர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். தங்கள் பெற்றோரின் 30வது திருமண விழாவை கொண்டாடுவதற்கே இலங்கைக்கு வந்துள்ளனர்.
அவர்கள் பயணித்த வாகனம் ட்ரக் வண்டியுடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மொத்தமாக 6 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் மகன் உயிரிழந்துள்ளார். 62 வயதான தந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. அக்கா மற்றும் தாயார் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இந்தநிலையில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.