மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால் பெற முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பலவிதமான கருத்துக்கள் உள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணியாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், ஜனாதிபதியின் நகர்வுகள் மற்றும் தேர்தல் நகர்வுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இப்போது கட்சிக்குள் குழப்பங்கள் நிலவுவதாக கூறும் கதைகள் அனைத்துமே பொய்யானவை. கட்சிக்குள் பல கருத்துக்கள் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியாக சிலர் தமது நிலைப்பாட்டினை கூறுகின்றனர்.
ஐக்கிய தேசிய முன்னணியாக நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்கு இடையில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. ஆகவே இவையனைத்தையும் தாண்டி பொதுவான ஒரு நிலைப்பாட்டினை எம்மால் எட்டமுடியும். இப்போதும் அவ்வாறான நிலைப்பாடு ஒன்றினை நாம் எட்டியுள்ளோம்.
எவ்வாறு இருப்பினும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும். அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறும். இதில் வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவில் எம்மால் ஆட்சியை அமைக்க முடியும்.
சகல மக்களுக்குமான பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை நாம் நல்லாட்சியில் முன்னெடுத்து வருகின்றோம். அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து ஆரோக்கியமான திசைக்கு நாட்டினைக் கொண்டுசெல்வோம்” என்று தெரிவித்தார்.