போர்ட் யூனியன் வீதி மற்றும் கொன்பரன்ஸ் வீதிப் பகுதியில் நேற்றுப் பிறபகல் 1.30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திதிற்கு சென்றடைந்த வேளையில், குறித்த பெண் மிகவும் பாரதூரமான காயங்களுடன் இருந்ததாகவும் உயிராபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ப்டட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்து அதிகாரிகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததாகவும், குறித்த வீதிப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்து விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
