கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும்
நிகழ்வு (31)
மட்டக்களப்பில் நடைபெற்றது .
கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எச்
எல் எம் .மீரா ஷாஹிப்பு தலைமையில்
2018 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசாரா மண்டபத்தில் நடைபெற்றது
இதன்போது
196 புள்ளிகளை பெற்று வலயம் ,மாவட்டம் ,மாகாணம் மட்டத்தில் முதல் இடத்தினையும் அகில இலங்கை
ரீதியில் நான்காம் இடத்தினை பெற்றுக்கொண்ட
மாணவன் ஜெயராஜ் துகிந்த்
ரரேஷ் மாணவனையும் கிழக்கு
மாகாணத்தின் .அம்பாறை ,திருகோணமலை ,மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை ஆகிய
மாவட்டங்களின் பாடசாலை மட்டத்தில் தரம்
ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவித்து
அவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும்
வழங்கி வைக்கப்பட்டது
கல்வி அபிவிருத்தி மன்றத்தினால்
ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண
ஆளுநர் எம் எல் எ எம் ஹிஸ்புல்லா மற்றும் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உறுப்பினர்கள்
,கல்விப்பணிப்பாளர்கள் .பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .
