LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, April 1, 2019

வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு


உளவியல் ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கலும் உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  (31) மட்டக்களப்பில் நடைபெற்றது


இலங்கை உளவியல் ஆலோசனை மையத்தின் ஏற்பாட்டில்    துன்பங்களை சந்திக்கத்தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்விகளே இல்லை  “ எனும் கருப்பொருளில்   வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளும் , தற்போது துறையில் உள்ளவர்களுக்கான கௌரவ விருதுகளும் , ,உளநல ஆற்றுகைப்படுத்துகை கற்கை நெறியினை நிறைவு செய்த தன்னார்வ தொண்டர்களுக்குமான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு ஊறணியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது

உளவியல் ஆலோசனை மையத்தின் செயலாளர் ரணிசியன் பார்த்லெட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் கலந்துகொண்டார்

இதன் போது வாழ்நாள் சாதனையாளர்களாக கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும் ,விரிவுரையாளருமான சின்னையா மௌனகுரு , முன்னாள் கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் சின்னதம்பி மனோகரன் , முன்னாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் குருநாதன் கதிர்காமத்தம்பி , உளநல உதவி அமைப்பின் ஸ்தாபகரும் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளருமான அருட் தந்தை போல் சற்குணநாயகம் ஆகியோருக்கான வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் . மட்டக்களப்பு அம்பாறை , பிரதி பொலிஸ்மா அதிபர் வி ஜி டி எ கருணாரத்ன ,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் .கே சித்திரவேல் ,இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  டி எஸ் . ஜெயந்த களுபோபில மற்றும் உளவியல் ஆலோசனை மையத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்









 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7