நாகை மாவட்டம் சீர்காழி அருகே கோயில் திருவிழாவின் போது ஐஸ்கிரீம் உட்கொண்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அவர்களது பெற்றோர்கள் அவர்களை உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
நாகை மாவட்டம் வானகிரியில் இன்று (திங்கட்கிழமை) கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதன்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோயில் திருவிழாவிற்கு வருகை வந்திருந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அங்கு விற்கப்பட்ட ஐஸ்கிரீமை வாங்கி கொடுத்துள்ளதை அடுத்தே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





