LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 23, 2019

வடக்கு – கிழக்கிலுள்ள பாடசாலைகளை மத்திய அரசிடம் வழங்குவது தவறு: சுரேஸ்

வடக்கு – கிழக்கிலிருந்து எந்தவொரு பா
டசாலையையும் மத்திய ஆட்சியின் கீழ் தேசிய பாடசாலையாக எடுக்கக்கூடாது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்கள் முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென போராடி வருகின்றனர்.

மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு கீழ் பாடசாலைகள் வருகின்றன. அவற்றை மீண்டும் மத்திய மத்திய அரசிடம் வழங்குவது தவறானதாகும்

தமக்கு தேவை ஏற்படின் பாடசாலை நிர்வாகம், இராஜாங்க அமைச்சர்களிடம் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்குமாறு கேட்பது சரியானதாகும். அதிகார பகிர்வுக்காக நாம் போராடி வரும் நிலையில், பாடசாலைகளை மத்திய அரசிடம் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7