யாழிற்கு சென்ற அவர் வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து யாழ்.தட்டாதெருச் சந்திக்கு அருகாமையிலுள்ள லக்சுமி பிளாசா மண்டபத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மறுசீரமைப்பு செயற்திட்ட மற்றும் அண்மையில் உருவாக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரத் தமிழர் ஒன்றியத்தின் மறுசீரமைப்பு செயற்திட்ட மாநாட்டிலும் கலந்துகொண்டிருந்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கட்சியினதும் கட்சியினதும் தமிழர் ஒன்றியத்தினதும் மறுசீரமைப்பு செயற்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது அண்மையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் தொகுதி அமைப்பாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்






