டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களைச் சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காங்கிரஸ் கட்சியையும் வாரிசு அரசியல் பற்றியும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஊடகம் உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளிற்கும் எதிராக பா.ஜ.க.வும் பிரதமர் மோடியும் செயற்பட்டுள்ளனர்.
மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். அவர்களுக்கு அரசியல் நிலைவரங்கள் நன்றாகத் தெரியும். இனியும் மக்களை முட்டாள்கள் என நினைப்பதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நட்டினது அனைத்து விவகாரங்களையும் மக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு தமது அவதானங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே இதற்கான தகுந்த பதிலினை எதிர்வரும் தேர்தலில் மக்கள் காண்பிப்பார்கள்” என பிரியங்கா காந்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.






