உத்தேச தொலைதொடர்பு சட்ட திருத்தங்களின் ஊடாக இந்த இணைய சேவையை குறைந்த விலையில் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டித்தன்மை, புத்தாக்கம், வாடிக்கையாளர் விருப்பு வெறுப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் இரண்டு ஆண்டு காலப் பகுதிக்குள் கனடாவில் இணைய சேவைக்கான கட்டணங்கள் நியாயமான அளவில் குறைவடையும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சி.ஆர்.ரி.சி.யின் நியதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புத்தாக்க மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் நவ்தீப் பெயின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
