நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வில்பத்து காடழிப்பு சம்பவத்திற்கும், அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கும் தொடர்பு உள்ளதாக பல்வேறு குற்றறச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”2012ஆம் ஆண்டு வில்பத்து காட்டில் மக்கள் குடியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் இதுவரை எந்தவொரு காணி துண்டும் மக்களிடம் கையளிக்கவில்லை.
அவ்வாறு வில்பத்து பகுதியில் காடழிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் எனக்கு எந்த தண்டனையை வேண்டுமானாலும் வழங்குங்கள்.
எனது சமூகம் எந்தவொரு தவறையும் செய்யவில்லை. ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
உண்மையாக 1990ஆம் ஆண்டு வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களே அங்கு குடியமர்தப்பட்டுள்ளனர். அவ்வாறு இடம்பெயர்ந்த மூவாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு குடியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு சில பகுதிகள் மக்களால் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் காடழிப்பு இடம்பெறவில்லை. எனவே எனக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் முன்னெடுக்கும் போலி பிரசாரங்கள் குறித்து தேடி பாரக்;குமாறு சபாநாயகரை கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.






