சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி சாஹிர் மௌலானா
அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் மக்களுக்கு
கையளிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பூநொச்சிமுனை கிளைக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க கம்பெரலிய
வேலைத்திட்டத்தின் கீழ் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி சாஹிர்
மௌலானா அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் மஞ்சந்தொடுவாய் ஹிமுரியா பாலர் பாடசாலைக்கு
தளபாடங்கள் , பூநொச்சிமுனை தாருஸ் ஸலாம்
பாலர் பாடசாலையின் சிறுவர் பூங்கா ,பூநொச்சிமுனை கடற்கரை கிரவல் உள்ளக வீதி , பூநொச்சிமுனை அஷ்ஷஹித் அஹமட்
லெப்பை கொங்ரீட் வீதி , பூநொச்சிமுனை இக்றாஹ் வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி
இயந்திரம் என்பன கையளிக்கும் நிகழ்வு
இன்று மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் நடைபெற்றது
பூநொச்சிமுனை கிராமோதய அபிவிருத்தி சங்கத்தின் தலைவரும் ,ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் பூநொச்சிமுனைவட்டார
அமைப்பாளருமான எஸ் எச் எ . அஸிஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் , சமூக
வலுவூட்டல் இராஜாங்க அமைச்சருமான செய்யித்
அலி சாஹிர் மௌலானா , மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , ,நகர
திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இனைப்பு செயலாளர் யு .எல்
.எம் .என் .முபீன் ,மண்முனை வடக்கு
பிரதேச செயலாளர் எம் .தயாபரன் , முன்னாள்
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஷிப்லி
பாறுக் ஆகியோர் கலந்துகொண்டு வேலைத்திட்டங்களை மாணவர்களுக்கும் ,மக்களுக்கும்
கையளித்தனர்
