மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து கடமையாற்றிய ஜெய்கா தொண்டு
நிறுவனத்தின் தொண்டர் உத்தியோகத்தரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது
ஜப்பான் நாட்டு ஜெய்கா தொண்டு நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பிற்கு
வருகை தந்து தொண்டர் சேவையின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து
மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை முகாமைத்துவம் படுத்து வேலைத்திட்டங்களையும்
,பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்பட 39 பாடசாலைகளில் சுகாதாரம் மற்றும் கழிவுகளை
முகாமைத்துவம் படுத்துவது தொடர்பான
விழிப்புணர்வு செயல்பாடுகள் மற்றும் பிரதேச சபைகளுடன் இணைந்து நகர் பகுதிகளில் கழிவுகளை அகற்றல் போன்ற
வேலைத்திட்டங்களை இரண்டு வருட காலம்
செயல்படுத்திய ஜெய்கா தொண்டு நிறுவனத்தின்
தொண்டரான சத்தோமி வடா இரண்டு வருட சேவைக்காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள
நிலையில் அவரின் சேவை நலனை பாராட்டி
கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது .
இதன் போது மாட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து கடமையாற்றியமைக்கு அவரது சேவை நலனை பாராட்டி நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த
கௌரவிக்கும் நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , பிரதி முதல்வர் கே
.சத்தியசீலன் ,கணக்காளர் திருமதி .ஜி எச் .சிவராஜா , கால்நடை வைத்தியர்
.கிரிசாந்தன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் ,மாநகர சபை நிர்வாக
உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
