அல்-கொய்தா மற்றும் அல்-ஷபாப் தீவிரவாதிகளுக்கெதிராக அமெரிக்க இராணுவத்தினர் இவ்வாறு தாக்குதல் நடத்துவார்கள். ஆபிரிக்க நாடுகளில் உள்ள இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராகவும் சோமாலிய அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் இது போன்ற தாக்குதல் நடத்தப்படுவதுண்டு. எனினும் தற்போது பொது மக்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றுபவர் என்றும் ஏனைய மூவரும் சோமாலிய தலைநகரில் இருந்து சோமாலியாவின் தென்மேற்கு பகுதிக்கு பயணித்து கொண்டிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-ஷபாப் அமைப்பினர் சோமாலிய தலைநகரில் இருந்து 2011 ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டனர். எனினும் அவர்கள் சோமாலியாவின் மத்திய தெற்கு பகுதியில் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.






