உயிரிழந்த 6 பேரின் ஜனாஸா கையளிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக இன்று( புதன்கிழமை) உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பிரார்த்தனைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலரது ஜனாஸா இவ்வாரம் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள 2 மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தள்ளனர். இதில் 21 பேரின் உடல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






