
இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த ரோகித போகொல்லாகமவிடம் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இந்த எச்சரித்திருந்தார் என கலாநிதி மோகன் சமரநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
அரசியல் ஆய்வாளரும், மஹிந்த ராஜபக்ஷ இருந்த போது, அவரது ஊடகப் பேச்சாளராக பதவி வகித்தவருமான மோகன் சமரநாயக்க, கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ‘எலிய’ அமைப்பினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
இதன்போது, அவர், “இலங்கையில் கால் வைப்பதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கான அவர்களின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே, ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களாகும்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக, போரை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் பேச்சைக் கேட்காவிட்டால், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, கொழும்பில் இருந்த அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக், வெளிவிவகார அமைச்சராக இருந்த ரோகித போகொல்லாகமவை எச்சரித்திருந்தார்” எனக் கூறினார்.
