கனடாவில் கடந்த மாதம் 25 ஆம் திகதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து அவருக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் கனடா நாடாளுமன்றத்தில் பதவியேற்கும் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பை இவர் பெற்றுள்ளார்.
சீக்கிய முறைப்படி தலையில் ‘டர்பன்’ அணிந்து நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சி தலைவராக முதல்முறை ஜக்மீத் சிங் நுழைந்தபோது, அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பு அளித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.






