குறித்த சிறுமி காணாமல் போன நிலையில் பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை அம்பர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் 25 வயதான சொலமன் ஜெப்ரி நேற்று தமது குழந்தையை விடுத்துவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் கடத்தல் குற்றங்களுக்கு கீழ் குழந்தையின் தந்தை மீது வழக்கு பதிவு செய்ப்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
மார்க்ஹாம் பகுதியில் உள்ள பொது பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் இருந்து குழந்தை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சிறுமி தேடப்பட்டு வந்தார். தனிப்பட்ட குடும்ப தகராறு காரணமாக இவ்வாறான கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






