இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் “சமாதான வரலாற்றைக் கொண்ட பல்லின மக்கள் வாழும் நியூசிலாந்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. அந்தநாட்டு மக்களும் இவ்வாறான விடயங்களை அனுமதிக்க மாட்டார்கள் என” குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, “பள்ளிவாசல்கள் மீதான பற்றிய செய்திகளை நான் கேட்டபோது மிகவும் வருத்தப்பட்டேன். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்து, சென்ட்ரல் கிறைஸ்ற்சேர்ச் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 40 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதேவேளை, இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
